Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பேரிச்சம்பழம் லட்டு… அருமையான சுவையில்… செய்வது எப்படி?

பேரிச்சம்பழம் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம்                            – ஒன்றரை கப்
பாதாம்                                            – அரை கப்
முந்திரி                                           – அரை கப்
தேங்காய் துருவல்                    – அரை கப்
கசகசா                                             – 2 மேசைக்கரண்டி
நெய்                                                 – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

பேரிச்சம்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி, அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை  வைத்து, அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து  ஈரப்பதம் போகும் வரை நன்கு  வறுத்து தனியாக பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில், கசகசா போட்டு மிதமான சூட்டில் வறுத்து அதனுடன் பேரிச்சம்பழத்தையும் சேர்த்து வதக்கி தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு  கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

இறுதியாக, வதக்கி வைத்த பேரிச்சம் பழத்துடன், தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டு போன்று உருண்டைகளாக  பிடித்துக் பரிமாறினால் சுவையான
பேரிச்சம் பழம் லட்டு தயார்.

Categories

Tech |