பருப்பு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 150 கிராம்
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகாய் – 4
செய்முறை:
முதலில் துவரம்பருப்புடன், மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸி ஜாரில் கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
வாணலியில் புளி மற்றும் உப்பை கலக்கி, அத்துடன்அரைத்த பொடியையும் சேர்த்து நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றை தாளித்து கொட்டவும். பிறகு நன்றாக கொதித்ததும் வெந்த பருப்பையும், நீரையும் கலக்கி, சிறிது நேரம் கழித்து இறக்கவும். சுவையான பருப்பு ரசம் ரெடி.