Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கஞ்சிக்கு ஏத்த டிஷ்… மிஸ் பண்ணிராதீங்க…!!

கருவாடு மசாலா பொரியல் செய்ய தேவையான பொருள்கள்:

கருவாடு                                            – 100 கிராம்
தக்காளி                                                – 1
சின்ன வெங்காயம்                         – 50 கிராம்
பூண்டு                                                    – 10 பல்
வரமிளகாய்                                       – 10
தேங்காய்                                            – 2 துண்டு
மஞ்சள்தூள்                                      – சிறிதளவு
எண்ணெய்                                         – தேவையான அளவு
உப்பு                                                       – தேவையான அளவு

தாளிக்க:

வெந்தயம்                                          – சிறிதளவு
சோம்பு                                                 – சிறிதளவு
சீரகம்                                                    – சிறிதளவு

செய்முறை:

முதலில் கருவாட்டை எடுத்து  மண் போகும் அளவுக்கு நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுதுண்டாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சி  ஜாரில் மிளகாய், தேங்காய், சோம்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, சீரகம் போட்டு  தாளித்து கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

அதனுடன் மிக்சி ஜாரில் அரைத்த விழுது, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சிறுதுண்டாக நறுக்கிய கருவாட்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை கெட்டியாக வந்ததும் இறக்கினால் சுவையான கருவாடு மசாலா பொரியல் ரெடி.

Categories

Tech |