ஃப்ரையிடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – அரை கிலோ
கேரட் – சிறிதளவு
பீன்ஸ் – சிறிதளவு
குடைமிளகாய், – சிறிதளவு
அஜினாமோட்டா – 1 சீட்டிஸ்கை
பூண்டு – 8 பல்
பெரிய வெங்காயம் – 3
உப்பு – தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் – தேவைக்கு ஏற்ப
வெங்காய தாள் – 10
சோயா பீன்ஸ் – 1 ஸ்பூன்
ரீபைண்ட் ஆயில் – 200 லிட்டர்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாசுமதி அரிசி, தண்ணிர் ஊற்றி உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டை தோலோடு தட்டிப் போடவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை, குடை மிளகாய், அஜினமோட்டோ ஆகியவற்றை சேர்த்து வதக்கி, பிறகு காய்கறிகளையும் போட்டு வேகும் வரை வதக்கி கொள்ளவும்.
மேலும் பொடியாக நறுக்கிய வெங்காய தாள்கள், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி நன்றாக கலந்ததுடன், அதில் ஆறிய சாதத்தை சேர்த்து கிளறி கொள்ளவும்.
மாற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு, முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து, சாதம் அதன் மேல் தூவி பரிமாறினால் சுவையான ஃப்ரையிடு ரைஸ் ரெடி.