Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆட்டு குடல் குழம்பு…இப்படி செஞ்சி பாருங்க…!!

ஆட்டுக்குடல் குழம்பு செய்ய தேவையானபொருட்கள்:

ஆட்டுக்குடல்        – ஒன்று
மல்லி                        – 2 தேக்கரண்டி
வெங்காயம்           – ஒரு கையளவு
உப்பு                          – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம்                        – 1 தேக்கரண்டி
இஞ்சி                        – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஆட்டு குடல் 1, 3 கப் தண்ணீர், 1 துண்டு இஞ்சி சேர்த்து குடலையும் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் வத்தல், சீரகம், மல்லி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த கலவையை வேகும் குடலில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி இறக்கவும். இப்போது சுவையான ஆட்டு குடல் குழம்பு ரெடி.

Categories

Tech |