தலைமுடி கருமையாகவும், பளபளப்பாகவும் வளர சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
முற்காலத்திலிருந்து மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்கும் அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை வளர்த்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் அதிகமாகவே இருக்கிறது. தலை முடி தான் ஒருவரது முக அமைப்பை, அழகை, தோற்றத்தை தீர்மானித்து அவர்களின் அழகை கூட்டுகிறது. பெரும்பாலான பெண்கள் பளபளக்கும், ஒளிரும், நீளமான, பலமான கூந்தல் கொண்ட பெண்களை பார்த்தால் அவர்களிடம் முடியின் ரகசியத்தை பெற விரும்புகின்றனர்.
தங்களது அன்றாட வாழ்க்கையில் முடி இழப்பை சந்திக்கும் பெண்கள் முடி உதிர்வு, முடி இழப்பு மற்றும் பலவீனமான முடி வளர்ச்சி போன்றவை மக்கள் வாழ்க்கையில், சாதாரண பிரச்சனைகளாக உள்ளன. மக்கள் சந்திக்கும் அப்பிரச்சனைகளுக்கு, இன்றைய கால நவீன வாழ்க்கை முறை,உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கலப்படம் செய்யப்பட்ட முடி பராமரிப்பு பொருட்கள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்நிலையில், தலைமுடியை பாதுகாக்க, முடி தொடர்பான பிரச்சனைகளை போக்க, ஆரோக்கியமான கூந்தலை பெற இப்பதிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிப்பை படித்து பயனடையுங்கள்.
நீளமான, அடர்த்தியான தலை முடி கருமையாக வளர இயற்கையான முறையில் சில வழிமுறைகள்:
1. முடியின் மறு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, வெங்காய சாறு – அதிலிருக்கும் சல்ஃபர் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பொருளாக இச்சாறு திகழ்கிறது. வெங்காய சாறை, வாரம் ஒரு முறை உச்சந்தலையில் தடவி வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தேவையான பொருள்கள் :
சிவப்பு வெங்காயம் – 2
பருத்தி பந்து – தேவையான அளவு
ஷாம்பு – 1
செய்முறை:
வெங்காயங்களை உரித்து, அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..மிக்சிஜாரில் வெங்காயங்களை அரைத்து, சாறெடுத்து வைத்து கொள்ளவும் .
இந்த வெங்காய சாறை உச்சந்தலையில், பருத்தி பஞ்சு கொண்டு தடவி, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடைசியாக, தலையை லேசாக ஷாம்பு போட்டு கழுவி விடவும்.
2. விளக்கெண்ணெய்/ஆமணக்கு எண்ணெய் அருமையான நன்மைகளான, விரைவான & பலமான முடி வளர்ச்சி மற்றும் சேதமற்ற கூந்தலை அளிக்கக்கூடியது. இது முடி வளர உதவும் ஒரு இயற்கையான சிகிச்சை முறை ஆகும். விளக்கெண்ணெய் முடி வளர உதவுவதுடன், வழுக்கை ஏற்பட்டுள்ள பகுதிகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, உடைந்த – பிளவுபட்ட கூந்தல் முனைகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.
தேவையானவை:
ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய்
செய்முறை:
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றங்களை காணலாம். அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆமணக்கு எண்ணெயை சூடுபடுத்தி கொள்ளவும்.
சூடுபடுத்திய எண்ணெயை உச்சந்தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். சூடான, ஈரப்பதம் கொண்ட துண்டை தலையில் கட்டி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
விளக்கெண்ணெய் மிகவும் பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவிக் கொள்ளலாம். அவ்வாறு எலுமிச்சையை சேர்ப்பதனால், தலையில் பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.