முடி உதிர்விலிருந்து பாதுகாத்து, அடர்த்தியான முடி வளர்ச்சி பெற, இயற்கையான முறையில் சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பொதுவாக மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்கும், அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும்உண்டு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த கிழவிகள் வரை எல்லா பெண்களுக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் இருக்கும்.பொதுவாக தலை முடியை தான் ஒருவரது முக அமைப்பு மற்றும் அழகின் தோற்றத்தை தீர்மானிக்கும். பெண்களில் பெரும்பாலானோர் , நீளமான, பளபளபாக்கவும், ஒளிரும் கூந்தலை பெறவேண்டும் என நிறைய பெண்கள் விரும்புகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக,நிறைய பெண்களுக்கு தலையில் முடி உதிர்வு, முடி இழப்பு, பலவீனமான முடி வளர்ச்சி போன்றவற்றால், தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகளாக இப்போதைய காலத்தில் மாறிவிட்டது . பெண்கள் சந்திக்கும் இந்த பிரச்சனைகளுக்கு, இன்றைய நவீன காலங்களில் உள்ள வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, கலப்படம் செய்யப்பட்ட பொருட்களால் முடி உதிர்வு, முடி நரைத்தல் போன்றவை ஏற்படுகிறது.
முடியின் மீது கலப்படம் உள்ள கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதால், அழற்சி ஏற்பட்டு அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது
மனஅழுத்தம், அதிர்ச்சி, அதிக மன கவலை, இரத்த அழுத்த குறைபாட்டினால் எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளால் அதிகப்படியான முடி உதிர்க்கிறது .
முடி உதிர்விலிருந்து தலைமுடியை பாதுகாத்து ஆரோக்கியமான கூந்தலை பெறுவதற்கு இயற்கை முறையில் சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
வெந்தயம்:
வெந்தயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை கொல்லும் தன்மை இருப்பதோடு, இது கூந்தலை பலப்படுத்தவும், ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. வெந்தயத்தை வாரம், ஒருமுறை பயன்படுத்தி வரலாம்.
தேவையான பொருள்கள்:
ஊறவைத்த வெந்தய விதைகள் – ½ கப்
கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
ரோஸ்மேரி எண்ணெய் – 7 துளிகள்
செய்முறை:
ஊறவைத்த வெந்தய விதைகள், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெயை மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து பின்பு, தலையை நன்கு அலசி வரவும். இதை போல் வாரம் ஒருமுறை செய்து வந்தால் எளிதில் முடி உதிராமல் நன்கு வளர்ச்சி பெரும்.
அரிசி கலைந்த தண்ணீர்:
அரிசி கலைந்த தண்ணீர்அல்லது அரிசியை வடித்த நீரை முகம் அல்லது முடிகளில் தேய்த்து மசாஜ் செய்வதால், சருமம் மற்றும் கேசத்திற்கு பல நன்மைகள் இதில் இருக்கிறது என்பதை பலருக்கும் தெரியாத முக்கிய இரகசியங்களாகவே நிறைந்துள்ளது. இதில் தலை மற்றும் கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய வைட்டமின்கள் கே, இ, பி6, புரதங்கள் நிறைந்துள்ளது. இது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தி முடியை அடர்த்தியாக வைக்கவும் உதவுகிறது.
தேவையான பொருள்கள்:
ஏதேனும் ஒருவகை அரிசி – ½ கப்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் ஏதேனும் ஒருவகை அரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்.
பின்பு உற வைத்த தண்ணீரை மற்றோரு பாத்திரத்தில் வடிகட்டியதும், அதை தலைமுடிக்க முழுவதும் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்.
அதன் பின்பு ஊற வைத்த தலைமுடியை, இலேசான ஷாம்பு போட்டு, தண்ணீர் ஊற்றி அலசி விடவும். இப்படி வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் நன்குமுடி வளரும்.