இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். இதனை நீக்க தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கி விடும்.
உருளைகிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது ,பார்லரில் பேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம் .