எள் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு எள் – 1 கப்
வெல்லம் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு எள்ளைப் போட்டு சிறிது நேரம் நன்கு வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.
பின்பு மிக்சி ஜாரில், வறுத்து ஆற வைத்த எள்ளை சேர்த்து, அதனுடன் வெல்லம், ஏலக்காயை பொடி சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்
பின்பு அதனை பாத்திரத்தில் போட்டு, சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் சுவையான எள் உருண்டை ரெடி.