கற்றாழை ஜெல்லினால் அதிகப்படியான நன்மைகள் இருந்தாலும், அதன் தீமைகள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கற்றாழை ஜெல்லில் இருக்கும் பல மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளதால் கற்றாழையானது சருமத்தில் உள்ள தோலிற்கும் மற்றும் உடம்பு ஆரோக்கியத்திற்கும், ஏராளமான நன்மைகளைக் வழங்குகிறது.
கற்றாழை ஜெல்லை தோல் பராமரிப்பிற்கு கிரீம் மற்றும் அழகு சார்ந்த மருந்து பொருளாக தயாரிக்க அதிகம் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லால் சருமத்திற்கும் மற்றும் கூந்தலுக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்க செய்கின்றன.
கற்றாழையானது, தீக்காயங்கள், வெட்டுக்கள், உட்புற காயங்களுக்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் எளிதில் புண்கள் குணப்படுத்துகிறது.
கற்றாழையை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்துள்ளது.
ஆனால் இத்தனை நன்மைகள் கொண்ட கற்றாழையை அதிகஅளவு பயன்படுத்தினால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்குகளை விளைவிக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.
கற்றாழை ஜெல்லை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உள்ள தீமைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பலவிதமான வயிற்று கோளாறுகளைஏற்படுத்தும்:
கற்றாழையில் லேடெக்ஸ் என்னும் நுண்பொருள் உள்ளதால் இதை அதிகம் பயன்படுத்துவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இது சிலருக்கு வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உடம்பில் உள்ள பொட்டாசியம் அளவையும் குறைத்து விடும்.
தோல் எரிச்சல்,அழற்சியை ஏற்படுத்தும்:
கற்றாழையை உணவில் சேர்ப்பதால் தோல் ஒவ்வாமை, சிவப்பு கண்கள், தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறையசெய்கிறது. கற்றாழை சாறு மலமிளக்கிய பிரச்சனைகளை கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.