சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்:
சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும் தருகிறது.
சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்:
சீத்தாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் இது, நினைவாற்றலை அதிகரிப்பதுடன், முக பருக்களை நிக்கி சரும பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக உள்ளது.ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கவும். பிற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்த பழமானது அதிக அளவு உடல் எடையைக் குறைத்து,உடம்பிலுள்ள எலும்புகளை வலுபெற செய்ய உதவுகிறது.
கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.மேலும் இது உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.
உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை நிக்கி,உடம்பில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.
.ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆற்றவும் உதவுகுக்கிறது.
சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும்.
உடல்பில் அதிக வலிமையை பெற சீத்தாப்பழத்தை, திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.