வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் கீழ்வருவனவற்றுள் காணலாம்:
வாழை இலையில் ஒரு நல்ல நச்சுகளை முறிக்கவும், நல்ல ஒரு கிரிமி நாசினியாகவும் இருப்பதால், இதில் சுடச்சுட சாதத்தை வைத்து சாப்பிடுவது உடம்பிற்கு மிகவும் நன்மை தரும்.
உணவை சூடாக பரிமாறும் பொது, வாழைஇலையில் உள்ள பச்சைத் தன்மையானது, உணவை எளிதில் சீரனிக்கவும், வயிற்றில் அல்சரினால் ஏற்பட்ட புண்ணை குணமாக்கும் தன்மையுடையது.
சிறுநீர் கழிக்கும் போது உணர்வினால் அவதிபடுகிறவர்களுக்கு நாள்தோறும் , வாழைஇலையில் உணவுகளை வைத்து சாப்பிடுவதால் கற்களை எளிதில் கரைக்க முடியும்.
தலைமுடியானது நன்கு கருமையாகவும், இளநரையிலிருந்து பாதுகாத்து கொள்ள, நாள்தோறும் வாழை இலையில் அடிக்கடி சூடான உணவுகளை வைத்து சாப்பிடுவதால், எளிதில் தலைமுடியானது நன்கு வளரவும் பெரிதும் உதவி புரிகின்றது
நாள்தோறும் வாழை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வருவதால் சருமம் மிருதுவாகவும், உடல் நலம் நன்கு சீராகவும், மந்தம், சோர்வு, இளைப்புகளை போன்றவைகளை விரட்டும் தன்மை உடையது.
வாழை இலைகளை சாப்பிட நாள்தோறும் உபயோகிக்கிறவர்களுக்கு, நீண்ட நாள்களுக்கு நோய்கள் தாக்காமலும், நோய் ஏதிர்ப்பு சக்திகயானது அதிகரிக்க செய்யவும், இது பயன்படுகிறது
அதிக பித்தம் ஏற்பட்டு வாந்தி, மயக்கத்திலிருந்து தடுக்கவும், நன்கு பசியைத் தூண்டும், நோய்களின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவும் வாழையிலையானது பெரிதும் உதவி புரிகிறது.