இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – 1 கப்
ரவை – 1/4 கப்
தயிர் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பழைய சாதம், ரவை, தயிர், உப்பு சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். அதனை 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து கொள்ளவும்.
அதன் பின் அடுப்பில் இட்லி சட்டியை வைத்து, அதில் அரைத்த மாவை ஊற்றி நன்கு வேக வேகவைத்தபின் இட்லியை எடுத்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.
அரைத்த மாவில் செய்த இட்லியை விட, மீதமான சாதத்தில் செய்த இட்லி மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.