கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது.
கத்திரிக்காயில் உள்ள சத்துக்களால் உடம்பில் உருவாகும் நோய்களை எளிதில் குணபடுத்தும் வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்தானது , சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் உடலில் உள்ள நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறதுபெரிதும் துணை புரிகிறது.
100 கிராமில் உள்ள கத்தரிக்காயில் உள்ள சத்துக்களில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து நிறைந்து உள்ளது.கத்திரிக்காய் உணவில்அதிக அளவு சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க பெரும் உதவியாக உள்ளது.
அடர்நீலம் உள்ள கத்தரிக்காயின் தோல்களில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதில் வைட்டமின் “பி’ காம்ப்ளக்ஸ் வகையான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின், நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அதிக அளவில் நிறைந்துள்ளது.
மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிகளவில் உள்ளன. கத்தரிக்காயில் உள்ள சத்துக்களானது, வளர்சிதை மாற்றத்திற்கு பெரிய அளவில் உதவி செய்கிறது