Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்காலத்திலும்… எளிதில் வளர கூடிய முருங்கைமரத்தில் உள்ள இலைகளில் இவ்வளவு நன்மைகளா ? இத்தன நாள்… இது தெரியாம பச்சை போச்சே..!!

அதிக இடங்களில், எளிதில் கிடைக்கக் கூடிய முருங்கைக் கீரையை அதிகஅளவு உணவில் சேர்ப்பதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

பொதுவாக முருங்கைக்கீரையானது கிராமபுறங்களில் எளிதில் கிடைக்க கூடியவையாகவும், நகர்புறங்களில் குறைந்த அளவில் விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை நமது  அன்றாட வாழ்வில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடம்பிற்கு  கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

முருங்கை இலையை சூப் போல் செய்து அடிக்கடி குடித்து வருவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோயிலிருந்து விடுபட உதவி செய்கிறது.  மேலும் 100 கிராமில் அளவில் உள்ள முருங்கைக்கீரையில் 92 கலோரி உள்ளதால், இது அதிக அளவில் புரதம், சிறிதளவு கொழுப்பு, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி,  காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் இந்த முருங்கைக்கீரையில் அதிகம் காணப்படுகிறது.

முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை          – ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர்                              – தேவையான அளவு
துவரம்பருப்பு                   – 1 டேபிள்ஸ்பூன் (வேகவைத்தது)
தக்காளி, வெங்காயம்  – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய்              – 1 (நறுக்கியது)

தாளிக்க:

சோம்பு, மிளகு, பட்டை – சிறிதளவு
எண்ணெய்                           – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், சோம்பு மிளகு பட்டையை சேர்த்து தாளித்ததும்  நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேகும் அளவுக்கு வதங்கியவுடன், முருங்கை இலையையும் சேர்த்து நல்ல வதங்கினபிறகு,  வேக வைத்த துவரம்பருப்பை தண்ணீருடன் சேர்த்து ஊற்றி, உப்பு தூவி, முடி வைத்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் முருங்கைக்கீரை சூப் ரெடி.

முருங்கை இலையை உணவில் சேர்ப்பதால், உடம்பிற்கு ஏற்படும் நன்மைகள்:

முருங்கை இலையில் உள்ள சத்துக்களை ஒப்பிடும்பொழுது ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சியும் பாலில் உள்ளதை விட 4 மடங்கு கால்சியமும் கையில் உள்ளதை விட 4 மடங்கு வைட்டமின் ஏ யும் பாலில் உள்ளதை விட இருமடங்கு புரதமும் வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது

முருங்கை இலையில் பீட்டா கரோட்டின் வைட்டமின் சி புரதம் இரும்பு மற்றும் பொட்டாசியம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளது நிலைகளாக சமைக்கப்படுகிறது முருங்கைக் கீரையின் பயன்கள் சாப்பிடும்பொழுது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

முருங்கை இலைச்சாற்றுடன், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் நாள் தோறும் குடித்து வர எளிதில் குடல் பூச்சிகள் அழிகிறது. மேலும் பிரசவமான தாய்மார்கள் அடிக்கடி உணவில் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ளவதால், தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், குறைந்தது முருங்கைக் கீரைச் சாற்றுடன் (15 மில்லி கிராம்),  தேன், மிளகு தூள் கலந்து, இரண்டு முறை சாப்பிட பலன் கிடைக்கும். மேலும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முருங்கைக்கீரை உணவு மிகவும் நல்ல பலனை தரும்.

முருங்கைக் கீரையில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதால், இது  நரம்புத்தளர்ச்சி, நரம்பு சம்பந்தமான கோளாறுகளை குறைக்கவும், மேலும் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்க உடலுக்கு சக்தியை தருவதோடு, உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை கீரை சாப்பிடகொடுப்பதால் நல்ல பலன் தரும். மேலும்  ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படும் குழந்தைகளுக்கு,  முருங்கைக் கீரையை சமைத்து உணவுடன் சாப்பிடகொடுப்பதால்,  உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, உற்சாகத்துடன் செயல்பட உதவுகிறது.

Categories

Tech |