கற்றாழையானது சரும அழகிற்கு மட்டும் பயன்படாமல், ஆரோக்கியத்ததையும் வளமுடன் வைக்க பெரிதும் உதவிப்புரிகிறது. கற்றாழையை, ஜூஸாக செய்து காலையில் வெறும் குடிப்பதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமறிப்பதோடு, மலச்சிக்கல், செரிமான கோளாறுகளை நிக்கி, உடல் எடையை குறைக்கவும், திசு வளர்ச்சியை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் கற்றாழையை அடிக்கடி சாப்பிட எடுத்து கொல்வதால் உடல் வெப்பநிலையை குறைத்து உடம்பிற்கு குளிர்ச்சியை தருகிறது.
கற்றாழை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:
சோற்று கற்றாழை – 1 கப் (நறுக்கியது)
கருப்பு உப்பு – தேவையான அளவு,
மோர் – 1 அரை கப்
தயிர் – 1 கப்.
செய்முறை:
முதலில் சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் உள்ள தோலை நீக்கியதும், சிறு துண்டுகளாக நறுக்கியபின்ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் கசப்பு மற்றும் வலுவலுப்பு தன்மையை போக்குவதற்காக 6 அல்லது 7 முறையாவது நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் மோர், தயிரை ஊற்றி, ருசிக்கேற்ப தேவையான அளவு கருப்பு உப்பு போட்டு நன்கு மத்தால் கடைந்தபின், அதை பிரிட்ஜில் வைத்தோ அல்லது அப்படியே பரிமாறினால், அருமையான ருசியில் கற்றாழை ஜூஸ் தயார்.
குறிப்பு:
கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் சூட்டை தணிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் கருப்பு உப்பானது, சித்த மருத்தவ கடைகளில் அதிகம் கிடைக்கும்.