Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்க்கத்துக்கு இவ்வளவு சின்னதா இருந்தாலும்… உடம்புக்கு அவ்வளவு நல்லது..!!

கிவி பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடம்பிற்கு  என்ன என்ன நன்மைகளும், அதனால் ஏற்படும் மருத்துவ குண நலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

இந்த கிவி பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் நிறைந்த பழமாகவே சொல்லலாம். பொதுவாக கிவி பழத்தை மேலை நாடுகளிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக இந்த பழங்களை கேக்குகளில் அழகுப்படுத்துவதற்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிவி பழத்திற்கு மற்றோரு பெயர் சீனத்து நெல்லிக்கனி என்றும் கூறுவர். மேலும் இந்த பழத்தில் எட்டு வகையான நிறங்களில் மஞ்சள் கலந்த பழுப்பு, தங்க நிறம், சிவப்பு நிறத்திலும் இந்த பழங்கள் நிறைய காணப்படுகின்றன. மேலும் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் எல்லா பழத்தைவிட, இந்த கிவி பழத்தில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நாள்தோறும் சாப்பிடும் சாப்பாட்டுக்கு பிறகு, இந்த பழத்தை சாப்பிட எடுத்து கொள்ளுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் பெரிய பலத்தை விட சிறிய பழத்திற்கு அதிக அளவு சுவைநிறைந்திருக்கும்.

கிவி பழத்தில் உள்ள மருத்துவ குணநலன்களால்,  உடம்புக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

இந்த பழத்தில் உள்ள தோலில் அதிக அளவு வைட்டமின் சி, கனிமச்சத்து, அண்டிஆக்சிடென்டு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழங்களை தோலுடன் அதிகமாக சாப்பிட எடுத்து கொள்ளவதால், இது இதயத்தை பலப்படுத்துவதோடு, பாதுகாக்கவும் செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,  உடல் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் ரேடிகள் என்ற செல்களானது உடம்பில் பல் வகையான நோய் தாக்கத்திற்கும், செல் அழிவிற்கும் காரணமாக இருப்பதால் இந்த ரேடிகளை அழித்து நோயிலிருந்து முழுவதுமாக பாதுகாக்க இந்த கிவி பழம் உதவுகிறது.

முதுமை காலத்தில் ஏற்படும் கண் பார்வை குறைபாடு, இதயத்தில் உள்ள துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த பழத்திலுள்ள பொட்டாசிய சத்துகளானது இதயதுடிப்பை சீராக வைக்கவும், உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் எளிதில் கிடைக்கின்றன.

இதயத்தில் உள்ள  இதய தமனிகளில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த தட்டகங்கள் ஒன்றாக சேர்ந்து கட்டியாகவோ அல்லது அடைப்பாகவோ மாறி இதயத்தில் மாரடைப்பை ஏற்படுத்துவதால், இந்த கிவி பழத்தில் உள்ள சத்துக்களானது  இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

இந்த கிவி பழத்தை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்பதால் இதில் உள்ள ஒமேகா என்ற கொழுப்பு அமிலமும், போலிட் என்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் இது முளை செல்களை அதிகரிக்க செய்து  முளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இந்த பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக உள்ளது. மேலும் இந்த பழத்தில் குறைவான கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையை குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

மேலும் இந்த பழத்தை சாப்பிடுவதால் இது மலச்சிக்கலுக்கும் உதவுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் இ சத்துக்கள் இருப்பதால் இது பெண்களுடைய சருமத்தை இளமை பொலிவுடன் வைக்கவும் இது உதவுகிறது.

இந்த பழத்தை அதிகமாக பெண்கள் சாப்பிடுவதால் கருப்ப பை பிரச்சனைகளுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது ஆஸ்துமா, மூச்சுதிணறல் பிரச்சனைக்கு தீர்வாகவும், நுரையீரல் பிரச்சனைக்கு இந்த பழம் உதவுகிறது.

Categories

Tech |