பொதுவாக எல்லா சருமத்தின் தன்மையும் , அதன் சுழலுக்கு ஏற்ற பழங்களை பயன்படுத்த தெரியாததால், எல்லாவகை பழங்களைஅப்படியே எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தபடுவதால் சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன . இதனால் எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம்
திராட்சையை எடுத்து மிக்சிஜாரில் போட்டு அரைத்து, அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு மஜாஜ் செய்து வந்தால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். இதை பொதுவாக எல்லா முகத்திற்கும் பயன்படுத்தலாம்.
பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் அழகு அதிகரிக்கும். இது ரசாயன பொருட்கள் வைத்து பயன்படுத்தி அதனால் அலர்ஜி ஏற்பட்டு, அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது
சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு இருக்க சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.