கிராம புறங்களில் அதிக அளவு கொத்த மல்லி என்ற தனியாவை பாரம்பரிய சமையலில் அதிகமாகவே பயன்படுத்துகின்றன. மேலும் இந்த மல்லி விதையினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
கொத்த மல்லி விதையை உணவில் சேர்ப்பதால் இது பித்தத்தினால் உருவாகும் வாந்தி,தலைசுற்றல்,கால்வலி, முதுகு வலி, முட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கொத்த மல்லி விதையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம், வயதான பெரியவர்களுக்கு சத்துக்களின் குறைபாடால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம், மூட்டுகளில் வலி விறைப்பு, முதுகு வலி போன்ற பிரச்சனைலிருந்து விடுபட முடியும்.
மேலும் இந்த கொத்தமல்லியை தேநீராக காய்ச்சி நாள்தோறும் அருந்துவதால் சுறுசுறுப்பை தருவதோடு, உற்சாகத்துடன் செயல்படவும், வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி, சளி இருமல், தலைவலி, ரத்த கொதிப்பு சர்க்கரை பித்த கிறுகிறுப்பு, சிறுநீர் நோய்கள் முதலான பல நோய்களை போக்க உதவுகிறது.
நீரழிவு நோயினால் அவதிப்படுகிறவர்களுக்கு 10 கிராம் அளவு தனியாவைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். மேலும் இது வெள்ளைப்படுதல் பிரச்சினையை போக்கி, மாதவிடாய் சுழற்சி சீராக செயல்பட்டு, இதனால் உருவாகும் வயிற்று வலி, வாயு தொல்லை போன்றவை சரி செய்ய உதவுகிறது.
இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் ஊறவைத்த கொத்தமல்லி தண்ணீரை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், எளிதில் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். கண்களில் ஏற்படும் அரிப்பு அலர்ஜி, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரால் கண்களை கழுவி வந்தால் கண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் என்பதால், கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்க உதவுகிறது.மேலும் இது இரத்த நாளங்களில் உருவாகும் இறுக்கத்தை தளர்த்தவும், மன அழுத்தம் குறைவதோடு, இதய தசைகளில் உண்டாகும் அழுத்தம் மற்றும் இதய பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.