Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப குண்டா இருக்கன்னு அதிக கஷ்டப்படுறீங்களா ? கவலை வேண்டாம்… இதோ எளிய டிப்ஸ்..!!

உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும், இயற்கையான முறையில் அற்ப்புதமான உணவு பொருட்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பொதுவாக குண்டாக இருப்பவர்கள், தங்களது முழு உருவத்தைக் கண்ணாடியில் பார்க்க முடியாமல்  கஷ்டப்படுபவர்களுக்கு இதோ எளிய முறையில் உங்கள் உடல் பருமனை குறைத்து கொள்ளலாம். மேலும்  உங்கள் உடல் பருமனாக மாறுவதற்கு, உண்ணும் உணவுகளால் எப்படி கொழுப்புக்கள் சேர்ந்து உடல் பருமனாகிறதோ, அதேப் போல் உண்ணும் உணவுகளின் மூலமே எளிதில் கொழுப்புக்களை கரைத்து கொள்ளலாம்.

மேலும் சரியான  உணவுகளின் மூலம் அழகான உடலமைப்பையும் பெறவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து கொள்ள சில உணவுப் பொருட்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இந்த உணவு பொருட்களை அன்றாடம் உட்கொள்வதோடு மட்டுமின்றி, நாள்தோறும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், சுறுசுறுப்பாக செயல்பட்டு, விரைவில் உடல் பருமனைக் குறைத்து விடலாம்.

அஸ்பாரகஸ்:

அஸ்பாரகஸில் அஸ்பாரகைன் என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும் பொருள் உள்ளது. அஸ்பாரகைனானது கொழுப்புக்களை ஒன்று சேர்க்கும் ஆக்சாலிக் ஆசிட்டுகளை உடைத்தெறிந்து, உடல் பருமன் குறைய உதவியாக இருக்கும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் உணவில் சேர்ப்பதால், இடுப்பு பகுதியில் சுற்றி உள்ள கொழுப்புக்கள் கரைக்க உதவி புரிகிறது. எனவே இதில் அயோடின், சல்பர் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளதால், இது எளிதில் கொழுப்பை கரைக்க முடியும்.

முழு தானியங்கள்:

முழு தானியங்களில் உள்ள ஓட்ஸ், முழு தானிய பிரட், கைக்குத்தல் அரிசி போன்றவை உணவில் சேர்ப்பதால் அதிகஅளவிலான கொழுப்பு கலோரிகளை எரிக்க முடியும். மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்கி, கொழுப்புக்களை கரைத்து கொள்ள உதவுகிறது.

பருப்பு வகைகள்:

நாம் உட்க்கொள்ளும் உணவுகளில் பருப்பு வகைகளும் ஒன்று. மேலும் இந்த பருப்புக்களில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து  40 சதவீதம்  இந்த பருப்பு வகைகளிலும் உள்ளது. எனவே அன்றாடம் பருப்புக்களை உணவில் சேர்த்து, கொழுப்புக்களை கரைத்து, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்களைப் பெற்று எளிதில் உடம்பிலுள்ள கொழுப்பு சத்துக்களை குறைத்து கொள்ளலாம்..

கேரட்:

கேரட்டில் உள்ள கரோட்டின் என்ற சத்துகள், கண்களுக்கு மட்டும் நல்லது தருவதோடு, உடம்பில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து கொள்ள உதவு புரிகிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில்அதிக அளவு நீர்ச்சத்து மட்டுமல்லாமல், சிலிகான், சல்பர் போன்ற சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது.மேலும் இதைஅதிகம் உட்க்கொல்வதால், உடம்பில் உள்ள கொழுப்பை கரைத்து உடலில் வியர்வையின் மூலமாக வெளியேற்றும். வெள்ளரிக்காயானது உடம்பில் உள்ள யூரிக் ஆசிட்டுகளின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

மிளகாய்:

மிளகாயில் அதிகளவிலுள்ள காப்சைசின் தான், காரத்தை தன்மையை வழங்குகிறது. மிளகாய்களை உணவில் சேர்ப்பதால், இதிலுள்ள காப்சைசினானது உடம்பில் வெப்ப தன்மையை அதிகரிக்க செய்து, கொழுப்பை எளிதில் கரைக்க  உதவிகிறது.

 

Categories

Tech |