Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலை டிபன்… லெமன் இடியாப்பம்… ஈசி ரெசிபி…!!

லெமன் இடியாப்பம் செய்ய தேவையான பொருள்கள்:

இடியாப்ப மாவு                – 2 கப்,
எலுமிச்சம் பழம்               – 1,
உப்பு                                         – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு                                     _ தேவையான அளவு
உளுந்தம்பருப்பு               _ தேவையான அளவு
கடலைப்பருப்பு                – தேவையான அளவு
பெருங்காயத்தூள்           – சிறிது,
கறிவேப்பிலை                 – சிறிது,
எண்ணெய்                          – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்                      – 1 சிட்டிகை.

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பாத்திரத்தில் இடியாப்ப மாவை எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

இடியாப்ப அச்சில் மாவை வைத்து கொடியாக மாவை பிழிந்தெடுத்து, நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து, அதனுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் நன்கு வதக்கி அடுப்பை அணைத்து இறக்கி கொள்ளவும்.

அதனுடன்  எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஆறிய இடியாப்பத்தில் கொட்டி கலந்து உதிரியாக  பரிமாறினால் சுவையான லெமன் இடியாப்பம் ரெடி.

Categories

Tech |