வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருள்கள்:
இளம் வாழைத்தண்டு – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
சீரக தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – 2 அரை கப்
சோளம் மாவு – கால் கப் (தேவைபட்டால்)
செய்முறை
முதல்ல இளம் வாழைத்தண்டின் உள்பகுதியை மட்டும் எடுத்து அதன் மேலுள்ள வலுவலுப்பான தோலை மட்டும் மெல்லியதாக நீக்கியபிறகு, கொத்தமல்லி தழையின் வேர்களையையும் நிக்கி விட்டபிறகு, துண்டுகளாக நறுக்கிக்கணும்.
பிறகு அடுப்புல அகலமான கடாயை வச்சி, எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கருவேப்பிலையை போட்டு, பொரிய ஆரம்பிக்கும் போது, இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு, சீரகத்தூள், சோம்பு தூளை சேர்த்து நல்லா கிளறிவிடணும்.
பின்னர் கிளறி விட்ட சோம்பு தூளுடன், நறுக்கி வச்ச வாழைத்தண்டுகளை போட்டு ஒரு நிமிடம் நல்லா கிளறிவிடனும். பின்னர் சோளம் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நல்லா கரைச்சிக்கணும்.
மேலும் கிளறிவிட்ட வாழைத்தண்டு நல்லா வதங்குனபிறகு, தண்ணீர் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு தூவி நல்லா கொதிக்க ஆரம்பிச்சதும், முடி வச்சி 10 நிமிடம் நல்லா கொதித்து வைக்கணும்.
கொதிக்க வச்ச கலவையானது, நல்லா கொதித்து நிறம் மாறி வாழைத்தண்டு நல்லா வெந்தபிறகு, மிளகுத்தூள் போட்டு, கெட்டியாகுவதற்கு தேவைபட்டால் கரைச்சி வச்ச சோளம் மாவு கலவையை ஊற்றி, நல்லா கொதிக்க வச்சி ஓரளவு நல்லா கெட்டியாக ஆரம்பிக்கும் பொது, நறுக்கி வச்ச கொத்தமல்லி தழையை போட்டு, லேசாக கிளறிவிட்டு இறக்கி பரிமாறினால் ருசியான வாழைத்தண்டு சூப் ரெடி.