கொளுத்துற வெயிலிலிருந்து, உடம்பை பாதுகாப்பத்தோடு, அதனால் ஏற்படும் உடம்பு சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
அடிக்கிற கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்துவதால் எளிதில் சர்மப் பிரச்சனையிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். அடிக்கடி வெளியில் செல்லும் போது கண்ணாடி, தொப்பி, குடை, குர்தா போன்றவற்றை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடம்பை சூட்டிலிருந்து குறைக்க, அடிக்கடி தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, பழச்சாறு, இளநீர், கூழ், தர்பூசணி ஜூஸ், பழ வகையில் செய்த ஐஸ்கிரீம் போன்றவற்றை தினமும் அருந்தி வருவதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தந்து, உடம்பு சூட்டிலிருந்து தணிக்க உதவுகிறது.
வயது முதிர்ந்த முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பமடைந்த தாய்மார்கள், உடல் நலத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருக்கும் என்பதால், அவர்களை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இல்லாத இடத்தில் வைத்து பராமரிப்பதால், நோயின் வாய்ப்பு குறைவாக ஏற்படும்.
வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் அதிகம் இருப்பதால், வெயிலில் வேலை செய்பவர்கள் ஈரப்பதம் நிறைந்த உடைகளை அணிந்து கொளவதால் உடம்புக்கு இதமாகவும், அதிக வெப்பம் உடம்பில் படாமலும் இருக்க செய்யலாம்.
மாலை நேரத்தில் வெயிலில் செல்லுவதை தவிர்ப்பதன் மூலமும், கருமை நிறமான அடர் வண்ண நிறங்களிலும், ரொம்ப இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருப்பதன் மூலமும், எளிதில் சரும நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
அதிக வெயில் நேரங்களில் அதிகமாக மது குடிப்பதோ அல்லது காபி, டீ, போன்ற சூடான உணவு பொருட்களை சாப்பிடுவதாலோ உடம்பிற்கு அதிக அளவு உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்து உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக வெயில் நிறைந்த கோடை காலத்தில், குளிர்ச்சியான பழவகைகளை ஜூஸாகவோ அல்லது அப்படியே சாப்பிடுவதனால் உடம்பிற்கு குளிர்ச்சியை தந்து, தேவையான சத்துக்களையும் தருவதோடு உடம்பை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
உடலை எப்போதும் அதிக வெயில் தக்கதவாறும், இயற்க்கையாக கிடைக்க கூடிய இளநீர், பழவகைகள், காய்கறிகள், அதிக அளவு தண்ணீரையும் பருகி வருவதால், வெப்பத்தினால் உருவாகும் உடல் சூட்டை தனித்து, உடம்பை குளிர்ச்சியாகவும், நோய் தோற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.