உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பருப்பை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
இதயம் என்பது மனித உடலில் முக்கியமான பகுதியாக இருப்பதால் இதனை ஆரோக்கியமாக வைப்பது அவசியம். அன்றாட வாழ்க்கையில் சில இடையூறுகளை விளைவிப்பதாலும், மேலும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் இதயநோயானது முக்கிய காரணமாக அமைகிறது. இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து கொள்ள இன்றைய வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்களை மாற்றி அமைப்பதாலும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க முடியும்.
உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை விட்டுவிடுவதாலும் உணவு சமநிலையைமேற்கொண்டால் இதயத்தை பலபடுத்த முடியும். இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
வால்நட் என்கிற அக்ரூட் பருப்புகள்:
உங்கள் ஆரோக்கியமான இதயத்திற்கு நல்ல உணவான வால்நட்ஸ் என்று சொல்கிற அக்ரூட் பருப்புகள் ஆகும். இந்த வால்நட்ஸானது உங்கள் இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த அக்ரூட் பருப்பில் அதிக அளவு ஒமேகா -3 என்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. பாதாம், மக்காடமியா நட்ஸ்கள், ஹேசல்நட்ஸ் சாப்பிடுவதாலும் இதய ஆரோக்கியமாக இருப்பதாகஇருக்க உதவுகிறது.
இந்த பருப்பை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்,எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், நுண்ணூட்டச்சத்துக்களும் நிரைந்துள்ளது.
இதில் மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடும்போது, அக்ரூட் பருப்புகளில் இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலம் அதிககம் நிறைந்துள்ளது.
தினசரி நீங்கள் 1-2 அக்ரூட் பருப்புகளை எளிதில் சாப்பிடலாம், ஆனால் அதை விட அதிகமாக சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, எடை அதிகரிப்பிற்கு வழிவகுத்து விடும்.
ஆனால் வால்நட் எண்ணெய் ஒரு சில நேரங்களில் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை ஊறவைத்த அஞ்சீர், பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 1 அஞ்சீர், 4 பாதாம் ஆகியவற்றை இரவில் ஊறவைத்து, மறுநாள் உட்கொள்லாம்.