இந்த பூண்டு பாலை தொடர்ந்து குடித்து வருவதால், காசநோய், அடிக்கடி உருவாகும் ஜூரம், ஆஸ்துமாவினால் உண்டாகும் இழப்பு, மலச்சிக்கல், வயிற்றில் உருவாகும் கட்டிகள் போன்றவைகளை இந்த பூண்டு பாலானது எளிதில் குணபடுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகி வரலாம்.
பூண்டு பால் செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு – 10 பற்கள்
பால் – 150 மில்லி லிட்டர்
தண்ணீர் – 150 மில்லி லிட்டர்
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பூண்டுகளை எடுத்து உரலிலோ அல்லது மிக்சிஜாரிலோ போட்டு பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அரைத்த பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் கலந்து, பூண்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
மேலும் கொதிக்க வைத்த பூண்டு பாலானது, பூண்டு நன்கு வேந்து, பால் பாதியளவாக வற்றியபின், அதை இறக்கி வைக்க போகும் போது, அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், ருசிக்கேற்ப பனங்கற்கண்டு போட்டு, நன்கு கலந்து பனக்கற்கண்டு பாலில் நன்கு கரைந்தபின், பரிமாறினால் ருசியான பூண்டு பால் ரெடி.