Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பவதியான பெண்களின்… வயிற்றில் உள்ள குழந்தையின் ஏடை அதிகரிக்கணுமா ? அப்போ… இத மட்டும் follow பண்ணி பாருங்க..!!

கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஆசை எல்லா பெண்களுக்கும் இருப்பதால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவுமுறைகளை பின்பற்றலாம்:

பெண்கள் பொதுவாக கர்ப்பவதியாக  இருக்கும் காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வளரும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள்  ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளில் காய்கறிகளை தவறாமல் உட்க்கொள்வது அவசியம் ஆகும். ஏனெனில் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் இந்த காய்கறிகளில் ஒரு சில காய்களை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், வயிற்றில் உள்ள குழந்தையானது ஆரோக்கியமாக வளர்ந்து, நல்லபடியாக பிறக்கவும் உதவுகிறது.

வயிற்றில் உள்ள குழந்தையானது, ஆரோக்கியமாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒரு சில காய்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ப்ராக்கோலி:

ப்ராக்கோலியை உணவில் சேர்ப்பதால் அதிலுள்ள கால்சியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான அளவு ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளதால்,  கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

பொதுவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள ஊட்ட சத்தான நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் போன்றவை உடம்பின்  ஆரோக்கிய வளர்ச்சிக்கும் பல  நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிட கொடுப்பதால், இதில் உள்ள ஊட்ட சத்தானது குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது.

பீட்ரூட்:

பீட்ரூட்டை பொதுவாக எல்லா காலத்திற்கும் சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் நன்மை சேர்க்கும் உணவுகளில் ஒன்று. ஏனெனில் இதில் இரண்டும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தக்காளி:

தக்காளியில் இருக்கும்  லைகோபைன், புற்றுநோயால் உருவான செல்களை அழிக்கும் திறன் அதிகமாக உள்ளததால் இதனை பொதுவாக அனைவரும் சாப்பிடக்கூடிய ஒன்று. எனவே தக்காளி பழத்தை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடகொடுப்பத்தால், குழந்தையின்  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து  நோயிலிருந்து விடுபடலாம்.

பச்சை பட்டாணி:

பச்சை பட்டாணியை அதிக அளவு கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிட வேண்டிய முக்கியமான உணவாகும்.  ஏனெனில் பச்சை பட்டாணியானது,அதில் உள்ள வைட்டமின் கே வில் உள்ள சத்தானது குழந்தைகளின் நரம்பியல் மண்டலம், எலும்புகளின் ஆரோக்கியம், தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

முட்டைக்கோஸ்:

முட்டைகோஸில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளதால், இது கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம் சாப்பிட கொடுக்க வேண்டிய உணவுகளில் முக்கியமான  ஒன்று. இதில் உள்ள வைட்டமின்,மக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம் உள்ளதால் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்க செய்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Categories

Tech |