அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ் செய்ய தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லேட் – 300 கிராம்
மில்க் சாக்லேட் – 150 கிராம்
கண்டன்ஸ்ட் மில்க் – 395 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
அக்ரூட் பருப்பு – 1/4 கப்
செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சாக்லேட்களை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி, கண்டன்ஸ்ட் மில்க், வெண்ணெயை சேர்த்து, உருகும் அளவுக்கு சூடுப்படுத்தவும்.
பின்பு அக்ரூட் பருப்பை துண்டுகளாக்கி கொள்ளவும். பிறகு சாக்லேட் கலவையானது நன்கு உருகியதும், அதில் துண்டுகளாக்கபட்ட அக்ரூட் பருப்புகளை சேர்த்து கலக்கவும். மேலும் கலந்து வைத்த கலவையை அகல தட்டில் ஊற்றி மேல் புறத்தை சமமாக்கி கொள்ளவும்.
பின்பு அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து சில மணி நேரம் கழித்து எடுத்து கலவையில் தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து பரிமாறினால் அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ் ரெடி. இதை ஸ்டாங் காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.