Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அல்சர் வலியால் அவதியா ? அப்போ இந்த சாம்பாரை ட்ரை பண்ணுங்க..!!

வெந்தயக்கீரை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை                        – 2 சிறுகட்டு
துவரம்பருப்பு                           – ஒரு கப்
புளி                                                – எலுமிச்சைப் பழ அளவு
சாம்பார் பொடி                         – 3 டீஸ்பூன்
கடுகு                                             – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்                  – அரை டீஸ்பூன்
எண்ணெய்                                 – தேவையான அளவு
உப்பு                                              – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வெந்தயக்கீரையை எடுத்து அதன் இலைகளை ஆய்ந்து  கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு நன்கு  வேகவைத்து கொள்ளவும்.

அதன் பின்பு புளியை எடுத்து  சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும். அதனை அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில், எண்ணெய் ஊற்றி நன்கு ஆய்ந்து வைத்த வெந்தய கீரையை போட்டு வதக்கவும்.

மேலும் அதனுடன்  கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்க வைத்து, கீரை நன்கு வெந்தவுடன், அதில் வேகவைத்து உள்ள பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு மற்றோரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து எடுத்து, வேக வைத்த குழம்பில் கொட்டி, சிறிது கிளறி இறக்கி பறிமாறினால், சுவையான வெந்தயக் கீரை சாம்பார் ரெடி.

Categories

Tech |