Categories
Uncategorized சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் இரும்பு சத்து அதிகரிக்க வேண்டுமா… இதை தினசரி உணவில் சேர்த்துக் கோங்க..!!

புளிச்சக்கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை                     – 1 கட்டு
பெரிய வெங்காயம்        – 1
பச்சைமிளகாய்                – 4
உப்பு, எண்ணெய்             – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு                                       – சிறிதளவு
உளுந்தம்பருப்பு                – சிறிதளவு
சீரகம்                                      – சிறிதளவு
மிளகாய் வற்றல்              – 4

செய்முறை :

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு புளிச்சக்கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கும் பொது நறுக்கிய புளிச்சக்கீரையை  போட்டு நன்கு வேக வைத்தபின் தண்ணீரை வடித்து,நன்கு கடைந்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு. சீரகம், மிளகாய் வற்றலை போட்டுநன்கு தாளித்தப்பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின்பு வெங்காயம் நன்கு வதங்கியதும், கடைந்து வைத்துள்ள புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து நன்கு கலந்து சில நிமிடம் நன்கு கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான புளிச்சக்கீரை கடையல் ரெடி

Categories

Tech |