தக்காளி ரசம் செய்ய தேவையான பொருள்கள்:
புளி – தேவையான அளவு
பெரிய தக்காளி – 2
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பருப்பு வேக வைத்த தண்ணீர்– 2 கப்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
நெய், கடுகு, சீரகம் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் புளியை எடுத்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தில் தக்காளிகளை எடுத்து துண்டுகளாக நறுக்கி, நன்கு கையால் மசித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.
பின்னர் கொதித்த கலவையானது, நன்கு வெந்து, பச்சை வாசனை போனபின்,அதில் ரசப் பொடி சேர்த்து, 2 நிமிடம் நன்கு கொதித்ததும், அதனுடன் பருப்புத் தண்ணீர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சேர்த்து நுரை பொங்க ஆரம்பிக்கும் போது, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கிய ரசத்தில் ஊற்றியபின், அதனுடன் கொத்தமல்லி தூவிப் பரிமாறினால், சாதத்துக்கு ஏற்ற சுவையான தக்காளி ரசம் ரெடி.