Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் வெப்பத்தை தணிக்கவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும்… குறைத்து கொள்ளணுமா ? இந்த ரெசிபி ஒண்ணு போதும்..!!

மேத்தி ஆலு பராத்தா செய்ய தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை          – 2 கைபிடி அளவு
கோதுமை மாவு        – 2 கப்
பொட்டுக்கடலை      – கால் கப்
உருளைக்கிழங்கு     – 3
இஞ்சி                              – ஒரு சிறிய துண்டு
பூண்டு                             –  4 பற்கள்
பச்சை மிளகாய்          – 1
தயிர்                                 – கால் கப்
கொத்தமல்லி தழை – சிறிது
மசாலா தூள்                 – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தூள்    – கால் டீஸ்பூன்
சீரகத்தூள்                       – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்               – காரத்திற்கேற்ப
எண்ணெய்                     – சிறிதளவு
நெய்                                  – தேவைக்கேற்ப
உப்பு                                  – ருசிக்கேற்ப

 

செய்முறை:

வெந்தயக்கீரையை எடுத்து தண்ணீர்ல நல்லா கழுவி எடுத்துக்கணும். பிறகு உருளைக்கிழங்கை பெரிய பாத்திரத்துல போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றினதும், அடுப்பில வச்சி நல்லா வேக வச்சி இறக்கி ஆறியதும், தோல் உறிச்சி நல்ல மசிச்சு எடுத்துக்கணும். பின்பு மிக்சிஜாரில் இஞ்சியையும், பச்சை மிளகாயையும் நறுக்கி போட்டு, பூண்டையும் சேர்த்து நல்லா மையாக அரைச்சி எடுத்துக்கணும்.

மேலும் கோதுமை மாவுடன், பொட்டுகடலை மாவு, மசிச்சி வச்ச உருளைக்கிழங்கு, தயிர், அரைச்சி வச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள்,மிளகாய் தூள், நறுக்கி வச்ச கொத்தமல்லி தழை, நறுக்கிய வெந்தயக்கீரை, ருசிக்கேற்ப உப்பு போட்டு நல்லா கிளறிவிட்டுக்கணும்.

பின்னர் கிளறிவிட்ட கலவையுடன், தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி,லேசாக எண்ணெய் ஊற்றியதும், நல்லா கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துல பிசைஞ்சி 10நிமிடம் நல்லா ஊறவைக்கவும். மேலும் ஊற வச்ச மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி, எல்லா மாவையும் சப்பாத்தியாக தேய்ச்சி வட்டமாக வெட்டி எடுத்துக்கணும்.

அடுப்புல தோசை கல்லை வச்சி, எண்ணெய் தடவினதும், வட்டமாக வெட்டி தேய்ச்சி வச்ச மாவை போட்டு இரண்டு பக்கமும் நெய் தடவி, திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நல்லா வேக வச்சி எடுத்து பரிமாறினால் ருசியான மேத்தி ஆலு பாராத்தா ரெடி.

Categories

Tech |