ஆலு பன்னீர் சாட் செய்ய தேவையான பொருள்கள்:
பன்னீர் துண்டுகள் – அரை கப்
நறுக்கிய உருளைக்கிழங்கு – அரை கப்
வெங்காயம் – 1
பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சாட் மசாலா பவுடர் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசான பிரவுன் கலர் வரும் வரை வதங்கியதும் எடுக்கவும்.
பின்பு அதில் உருளைக் கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுத்து கொள்ளவும்.மேலும் அதே கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாகியதும், அதில் நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, அஜினமோட்டோ சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அதனுடன் நறுக்கிய பன்னீர் துண்டுகள், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறியபின், அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி சிறிது களறி இறக்கியதும் கொத்த மல்லி தழையை தூவி பரிமாறினால் சுவையான ஆலு பன்னிர் சாட் ரெடி.