அனார்கலி சாலட் செய்ய தேவையானப் பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கப்
மாதுளம் முத்துக்கள் – அரை கப்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம்பழசாறு – சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சாலட் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை சிறியளவு சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு கொத்தமல்லி இலையையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு வெந்ததும், 3 விசில் வந்ததும், இறக்கி நீரை வடித்து, ஆற வைத்து கொள்ளவும்.
மேலும் ஒரு பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு, சாட்மசாலாத்தூள், எலுமிச்சைபழச்சாறு, வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை, மாதுளம் முத்துக்கள், நறுக்கிய கொத்தமல்லி இலை, சிறிது உப்பு தூவி, சாலட் ஆயில் ஊற்றி நன்கு கலந்ததும், சில நிமிடம் கழித்து பரிமாறினால் ருசியான அனார்கலி சாலட் ரெடி.