Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சருமத்தை பொலிவு பெற செய்ய வேண்டுமா… அப்போ இந்த மில்க் ஷேக்கை ட்ரை பண்ணுங்க..!!

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

ஆப்பிள்                  – 1
பால்                         – 1 கப்
பேரிச்சம் பழம்   – 5
சர்க்கரை                – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேரிச்சப்பழத்தை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கியபின், அதனைப் பாலில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஆப்பிளை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

பின்பு மிக்ஸிஜாரில் நறுக்கிய ஆப்பிள், சர்க்கரை,  பாலில் ஊறவைத்த  பேரிச்சம்பழத்தை அப்படியே சேர்த்து நன்கு அரைத்து எடுத்து, கிளாசில் ஊற்றிய பின்பு, அதில் நறுக்கிய ஆப்பிள், பேரீச்சம்பழ துண்டுகளை சேர்த்து அலங்கரித்து எடுத்து பரிமாறினால், ருசியான ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

 

Categories

Tech |