அரேபியன் டிலைட் செய்ய தேவையான பொருட்கள்:
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப்
சாக்லெட் சாஸ் – 1/2 கப்
பிஸ்தா, பாதாம் – கால் கப்
முந்திரி, வால்நட் – கால் கப்
பேரீச்சம்பழம் – 1/2 கப்
செய்முறை:
முதலில் பாதம், பிஸ்தா, வால்நட், முந்திரி பருப்புகளை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு கோட்டை இல்லாத பேரீச்சம்பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மேலும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், நறுக்கிய பிஸ்தா, வால்நட்ஸை ஓவ்வொன்றாக வைத்தபின், அதன் மேல் சாக்லெட் சாஸ், நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள், நறுக்கிய பாதாம் பருப்பு, முந்திரியை வைக்கவும்.
இறுதியில் அதில், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்களை ஒவ்வொன்றாக அலங்கரித்து எடுத்து, அதை பிரிட்ஜில் வைத்து சில நிமிடம் கழித்து எடுத்து பரிமாறினால், ருசியான அரேபியன் டிலைட் ரெடி.