அவல் கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்
முந்திரி – 15
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் கூடுதலாக நெய் ஊற்றி, அவலை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விட்டு, பொன்னிறமானதும் வறுத்து இறக்கி கொள்ளவும்.
மேலும்அடுப்பில் கடாயை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றியபின், அதனுடன் கேசரி பவுடரை கலந்து நன்கு கொதிக்க வைத்து, வறுத்த அவலை போட்டு கரண்டியால் கிளறி விட்டு நன்கு வேகவிடவும்.
பின்னர் வேக வைத்த அவலானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து சில நிமிடம் நன்கு கொதிக்க விட்டபின், சர்க்கரை நன்கு இளகி கெட்டியானதும், அதனுடன் நெய் சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
கடைசியில் கொதிக்க வைத்த கலவையில், நெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் ஏலக்காயை தூளாக நுனுக்கி போட்டபின், பொன்னிறமாக வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி விட்டு கெட்டியாகி இறுகி வர ஆரம்பிக்கும் போது இறக்கி வைத்து பரிமாறினால்,அருமையான ருசியில் அவல் கேசரி ரெடி.