மூங்கில் அரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் :
மூங்கில் அரிசி – கால் கப்,
பால் – 4 கப்,
வெல்லத்தூள் – அரை கப்,
தேங்காய்த் துருவல் – அரை கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
உலர் திராட்சை – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் மூங்கில் அரிசியை எடுத்து கழுவி தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து எடுத்து, மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி பாதிஅளவாகும் வரை சுண்டக்காய்ச்சி கொள்ளவும். அதனை அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி மாவை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து நன்கு வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து, ஒரு கொதி வந்தததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான மூங்கில் அரிசி பாயாசம் ரெடி.