Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த இனிப்பான ரெஸிபிய…குழந்தைகளுக்கு செய்து கொடுங்க… அப்புறம் நடக்குறத பாருங்க..!!

வாழைப்பழ அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்                       – 3
உலர் திராட்சை                   – 50 கிராம்
மைதா மாவு                          – 25 கிராம்
தேங்காய் துருவல்            – 1 கரண்டி
சர்க்கரை                                 – 50 கிராம்
முந்திரி                                    – 20
ஏலப் பொடி                           – 1 தேக்கரண்டி
உப்பு                                          – 1 சிட்டிகை
எண்ணெய்                            – தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பாத்திரத்தை  பழுத்த வாழைப்பழம் எடுத்து அதன் தோலை நிக்கியபின் கட்டியில்லாமல் நன்கு  மசித்து எடுத்து  கொள்ளவும்.

பின்பு மிக்சிஜாரில் முந்திரி, உலர் திராட்சை, தேங்காய் துருவலை  சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

மேலும் அரைத்த விழுதுடன், மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை, ஏலப்பொடி, உப்பு சேர்த்து அதனுடன்   சிறிதளவு  தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து அதில் சிறு உருண்டைகளாக கலவையாக எடுத்து கொள்ளவும்.

அதனையடுத்து அடுப்பில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்ஊற்றி  நன்றாக காய்ந்தவுடன் உருண்டைகளாக கரைத்து வைத்த கலவையை அதில்  ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால்  சுவையான வாழைப்பழ அப்பம்  தயார்.

Categories

Tech |