Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எலும்புகள் வலிமையாக இருக்க உதவும் வாழைப் பழத்தில்… குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த… சுவையான இந்த ரெசிபிய செய்து கொடுங்க..!!

வாழைப்பழ கூழ்                           –  அரை கிலோ
சர்க்கரை                                            – முக்கால் கிலோ
சிட்ரிக் ஆசிட்                                   – கால் டீஸ்பூன்
உப்பு                                                     – அரை டீஸ்பூன்
வெண்ணெய்                                   – 125 கிராம்
வெனிலா எசன்ஸ்                        – சிறிதளவு

செய்முறை:

முதலில்  வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கூல் போல் எடுத்து கொள்ளனும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்அரைத்த வாழைப்பழ கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பை சேர்த்து ஒன்றாக,  நன்கு கலந்து சீராக கிளறி விடவும்.

பின்பு அதை சீராக கிளறும் போது, கூழானது நடுவில் உருண்டை போல் வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி கலர் எசன்ஸை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

மேலும், இதை வெண்ணெய் தடவிய தட்டை எடுத்து, அதில் இறக்கி வைத்த கலவையை  போட்டு நன்கு ஆற வைத்த பின்பு, அதை துண்டுகளாக வெட்டி, எடுத்து  பரிமாறினால் சுவையான பனானா கேக் ரெசிபி தயார்!

Categories

Tech |