Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து நிறைந்த இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

 பசலைக்கீரை தோசை செய்ய தேவையான பொருள்கள் 

இட்லி மாவு                    – 200 கிராம்
பசலைக்கீரை                – அரை கட்டு
பச்சை மிளகாய்           – 2
பெரிய வெங்காயம்    – 1
தேங்காய்                         – ஒரு துண்டு
எண்ணெய்                      – தேவையான அளவு
உப்பு                                   – தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பசலைக்கீரையை எடுத்து, சுத்தம் செய்து, அதன் இலைகளை மட்டும் ஆய்ந்ததும், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

மேலும் வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கிய பசலைக் கீரை, சிறிது உப்பு தூவி, நன்கு கிளறிவிட்டதும், மூடிவைத்து, பாதியளவு வெந்ததும் இறக்கி கொள்ளவும்.

மற்றோரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அதில் வதக்கி இறக்கி வைத்த பசலை கீரையை சேர்த்ததும், அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கி கொள்ளவும்.

இறுதியில் அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கலக்கி வைத்த மாவு கலவையை தோசை போல், கல்லில் சுற்றிலும் மெல்லியதாக ஊற்றி, வெந்ததும் இருபுறமும் திருப்பி போட்டு  சுட்டு எடுத்தால், ருசியான பசலைக்கீரை தோசை தயார்.

Categories

Tech |