Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தசோகை நோய்லிருந்து விடுபடணுமா ? அப்போ கவலைய விடுங்க… இந்த ரெசிபிய ட்ரை பண்ணுங்க..!!

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப் செய்ய தேவையான பொருட்கள்:

நறுக்கிய கேரட்            – 1 கப்
பெரிய வெங்காயம்    – 1
பாதாம்                              –  6
வெண்ணெய்                 – 1 டேபிள் ஸ்பூன்
பாலாடை(கிரீம்)         – 1/4 கப்
காய்ச்சிய பால்             – 1/4 கப்
தேங்காய்ப்பால்           – 1/2 கப்
உப்பு                                   – சுவைக்கேற்ப
மிளகுத்தூள்                   – 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க:

துருவிய பாதாம்          – சிறிதளவு
கொத்தமல்லி               – சிறிதளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் வெங்காயம், கேரட்டையும்  எடுத்து சுத்தமாக கழுவிபின், அதன் மேல் உள்ள தோல்களை லேசாக நீக்கியதும், சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் வெண்ணெயை போட்டு, சூட்டில் ஊறுகியதும், நறுக்கிய பாதாம், வெங்காயம், கேரட்டை போட்டு, சில நிமிடம் வதக்கியபின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை முடி வைத்து, 2 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்னர் வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும், இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். மேலும் மிக்சிஜாரில், ஆற வைத்த கலவையை போட்டு, அதனுடன் பால் சேர்த்து மையாக அரைத்து எடுத்து வடிகட்டி கொள்ளவும், .

பின்பு வடிகட்டிய கலவையை அடுப்பில் வைத்து, அதனுடன் சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து,சில நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.

மேலும் கொதித்த கலவையுடன் கிரீம், தேங்காய்ப்பால் சேர்த்து, சிறிது கிளறியபின்  இறக்கி வைத்து, அதன் மேல் துருவிய பாதாம், கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறினால், ருசியான பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப் ரெடி.

Categories

Tech |