பயத்தம் மாவு லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
பயத்தம்பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
நெய் – 100 மில்லி
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
முந்திரிப் பருப்பு – 10
செய்முறை:
முதல்ல அடுப்புல கடாயை வச்சி, சிறிது நெய்யை மட்டும் ஊற்றி சூடேறியதும், அதில் முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்துக்கணும்.
பிறகு அதே கடாயை அடுப்புல வச்சி, பயத்தம்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறியதும், மிக்ஸிஜாரில் போட்டு மையாக பவுடர் போல் அரைத்ததும், மாவு சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக்கணும். மேலும் அதே போல் சர்க்கரையும் மிக்சிஜாரில் போட்டுஅரைத்து சலிச்சி எடுத்துக்கணும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சலிச்சி வச்ச பயத்தம்பருப்பு மாவையும், சர்க்கரையும் போட்டு, மீதியுள்ள நெய்யையும் சூடாக்கிஅதில் சேர்த்து, அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்து நன்கு கலந்து, கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் ருசியான பயத்தம் மாவு லட்டு ரெடி.