பீட்ரூட் பன்னீர் சாலட் செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 200 கிராம்
பன்னீர் – 100 கிராம்
கோஸ் – சிறிதளவு
கேரட் – சிறிதளவு
கெட்டி தயிர் – சிறிதளவு
தேன் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கோஸ், கேரட், பன்னிர் ஆகியவற்றை மிக மெல்லியதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் பீட்ரூட்டைஎடுத்து தோல் நீக்கி, வட்டமாக வெட்டியபின் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் நீராவியில் 5 நிமிடங்கள் வேக விடவும்.
மேலும் மெல்லியதாக வெட்டிய பன்னிரை எடுத்து, அதை பீட்ரூட் மேல் அடுக்கி வைக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில், அடுத்த அடுக்கு பன்னீர் என்ற ரீதியில் இருக்க வைக்கவும்
மேலும் அதனுடன் நறுக்கிய கேரட், கோஸ், பீட்ருட் மேல் தூவியபின், கெட்டி தயிர், தேனை சேர்த்து தனியாக நன்கு கலக்கி பீட்ருட் கலவையின் மீது வைத்து பரிமாறினால் சுவையான பீட்ருட் பன்னிர் சாலட் ரெடி. மேலும் அதனுடன் துளசி இலைகளை தூவி பறிமாறலாம்.