பீட்ரூட் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1 (பெரியது)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை எடுத்து தண்ணீரால் நன்கு கழுவியபின், அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு தேங்காயை எடுத்து பூவாக நன்கு துருவி எடுத்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை தோல் நீக்கியபின் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய பீட்ருட் துண்டுகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு தூவியபின், மூடிவைத்து, 3 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி கொள்ளவும்.
மேலும் அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தூவி தாளித்தபின், பெருங்காயம் வாசனை போகும் வரை கரண்டியால் நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் பெருங்காயம் வாசனை போனபின், நறுக்கிய வெங்காயத்தைப் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கியபின் அதனுடன் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கியபின் அதிலுள்ள தண்ணீரானது நன்கு வற்றும் வரை நன்கு வேக விடவும்.
பீட்ருட் நன்கு தண்ணீர் வற்றியதும், அதனுடன் சாம்பார் பொடி, கூடுதலாக ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டபின், துருவி வைத்த தேங்காயை போட்டு நன்கு கிளறி விட்டு நன்கு கெட்டியானபின் இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான பீட்ரூட் பொரியல் தயார்.