தினமும் பால் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
பால் குடிப்து என்பது பொதுவாக அனைவர்க்கும் மிகவும் பிடித்தது. மேலும் பால் உண்ணும் உணவுகளில் இன்றியமையாத ஒன்றாகும். பாலை குடிக்கும் பொது அதிக சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், இதில் அதிக அளவு சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இது சாப்பிடும் உணவுப் பொருளும் ஒன்று. நாம் குடிக்கும் ஒவ்வொரு கிளாஸ் பாலிலும், அதிக அளவு புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
நிறைய உணவு பொருட்களில் கிடைக்காத சில சத்துக்கள் பாலில் இருப்பதால், அனைவரும் பொதுவாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு பொருளில் முக்கியமான ஒன்று பால் எனலாம். மேலும் 2 கப் அளவு பாலை தினசரி எடுத்து கொள்ளவதால் உடம்பில் பல நன்மைகள் ஏற்படுகிறது.
ஆனால். நம்மில் எத்தனை பேர் தினமும் பால் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பால் குடிப்பதை அதிகம் விரும்புவதில்லை. குறிப்பாக பெண்கள், பால் குடித்தால் குண்டாகி விடுவோம், முகப்பரு வந்து விடும் என்று பல காரணங்களை காட்டி பால் குடிப்பதை தவிர்த்து வருகிறோம்.
தினமும் பால் குடிப்பதனால் ஏற்படும் பயன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
வயது முதிர்ந்த பெண்களுக்கு, பொதுவாக மாதவிடாய் ஏற்படுவது நின்றுவிடும், இதனால் அவர்கள் கட்டாயம் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் உள்ள கால்சியமனானது, கால் முட்டு வழியை குறைப்பதோடு, தேய்மானதிலிருந்து விடுபட பெரும் உதவியாக உள்ளது.
உடம்பிலுள்ள எலும்புகள் இயங்குவதற்கு, கால்சியம் மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் கால்சியம் வயது அதிகரிக்கும் போது, குறைய தொடங்குவதால், பால் குடிப்பதால், இதில் உள்ள கால்சியமானது, உடலில் கால்சியசத்தை அதிகரிக்க செய்து, உடலை சீராக பராமரிக்க உதவுகிறது.
பால் குடிப்பதனால், இரத்தக் கொதிப்பை கட்டுபடுத்துவதற்கும், எடை குறைவதற்கும், இதயம் சம்பந்தமான நோகளுக்கும், கேன்சர் , நீரிழிவு நோயினால் அவதிபடுபவர்களுக்கும், பாலானது பெரிதும் உதவி புரிகிறது. சிறுநீரக கற்களால் பாதிப்பு அடைந்தவாகளும் கூட பாலை பருகி வரலாம்.
பாலில் வைட்டமின் பி12 உள்ளதால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்கிறது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், சருமம் பொலிவு பெற செய்கிறது.
நாள்தோறும் இரவில் ஒரு கப் பாலிலை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும். மேலும் பாலில் பொட்டாசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.