பிரட் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1/2 கப்
கடலை மாவு – 1/4 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 3/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 6
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் பிரட்டை எடுத்து அதை சிறிய சதுர துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, ஓமம், சாட் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
அதன் பின்பு ஒவ்வொரு பிரட் துண்டுகளாக எடுத்து, அதை கலக்கி வைத்த பஜ்ஜி மாவில் நனைத்ததும், கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் சுவையான பிரட் பஜ்ஜி தயார். இதை தக்காளி ஜாசுடன் சாப்பிடலாம்.