கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 2
தயிர் – 2 கப்
வெங்காயம் – 3
சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3
தனியா – 1/2 கப்
எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
உப்பு – தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 3 அரைத்தது
இஞ்சி – 2
செய்முறை:
முதலில் கத்தரிக்காய் எடுத்து, அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் நன்கு பூசியபின், அடுப்பில் வைத்து வேகும் அளவுக்கு சுற்றிலும் சுட்டு எடுத்து அதன் மேலுள்ள காம்பையும், அதன் சுற்றிலுள்ள தோல்களை நீக்கியதும், ஒரு பாத்திரத்தில் போட்டு மத்தால் நன்கு மசித்து கொள்ளவும்.
பின்பு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும். மேலும் தேங்காயை துண்டுகளாக நறுக்கியபின், மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் மசித்த கத்திரிக்காயுடன், தயிர், நறுக்கிய வெங்காயம், அரைத்த தேங்காய் விழுது, அரைத்த மிளகாய், சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு பொரிந்தபின், கறிவேப்பிலையை தாளித்ததும், அதை கலந்து வைத்த கத்தரிக்காயில் ஊற்றி நன்கு கலந்தபின், கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து, ஆற வைத்து பரிமாறினால், ருசியான கத்தரிக்காய் சட்னி ரெடி.