Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் கத்திரிக்காயில்… புதுவகையான ரெசிபி செய்து அசத்துங்க..!!

கத்தரிக்காய் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :

சாதம்                                  – 1 கப்
பிஞ்சுக் கத்தரிக்காய்   – 6
வெங்காயம்                     – 1
கடுகு                                   – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்      – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்             – 1
மஞ்சள்தூள்                     – ஒரு சிட்டிகை
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு           – தேவையான அளவு
கொத்தமல்லி தழை    – சிறிதளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றியபின்,ருசிக்கேற்ப உப்பு போட்டு நன்கு வேக வைத்து, அரிசி வெந்ததும் இறக்கியபின், அதிலுள்ள தண்ணீரை உதிரியான சாதமாக வடித்து எடுத்து கொள்ளவும்.

பின்பு வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாயை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு  தாளித்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

பின்னர் வெங்காயம் நன்கு வதங்கியபின், அதனுடன்   அரைத்த இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து கரண்டியால் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர், நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து, நன்கு வதக்கியபின், நல்ல வேக வைக்கவும்.

பிறகு வேக வைத்த கத்தரிக்காயானது பாதியளவாக வெந்ததும், அதனுடன் கரம்மசாலாத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு கரண்டியால் நன்கு கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வதக்கிய கத்தரிக்காய் கலவையானது நன்கு வெந்து வாசனை வந்தபின், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவியபின், லேசாக பிரட்டி விட்டபின் இறக்கி வைத்து, வேக வைத்த உதிரியான சாதத்தில் ஊற்றியபின், அதனுடன்  நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, நன்கு எல்லா இடத்திலும் படும்படி நன்கு கிளறி விட்டபின், முடி வைத்து பரிமாறினால் ருசியான கத்திரிக்காய் சாதம் ரெடி.

Categories

Tech |