பிரட் வடை செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் – 10
அரிசிமாவு – 3 ஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
கேரட் – ஒரு கைபிடி அளவு
முட்டை கோஸ் – அரை துண்டு
சோடாஉப்பு – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
இஞ்சி `111- ஒரு சின்ன துண்டு
செய்முறை:
முதல்ல வெங்காயம், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கொதிகமல்லி தழை, கருவேப்பிலையை எடுத்து நல்லா சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கணும். பின்பு கேரட்டையும், இஞ்சியையும் துருவி எடுத்துக்கணும்.
அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து அதன் சுற்றியுள்ள பகுதியை மட்டும் நிக்கிட்டு, அதன் உள்பகுதியை மட்டும் எடுத்துக்கணும். பிறகு பிரட்டின் வெட்டி எடுத்த பகுதியை மட்டும் ஒரு பாத்திரத்தில எடுத்து நல்லா உதிர்த்து போட்டுக்கணும்.
மேலும் உதிர்த்து வச்ச பிரட்டுடன், அரிசிமாவு, நறுக்கி வச்ச வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய முட்டை கோஸ், துருவிய இஞ்சி, சோடாஉப்பு தூவி, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கி வச்ச கொத்தமல்லி தழை, கருவேப்பிலையை போட்டு,கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்லா வடை மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக்கணும்.
பின்னர் அடுப்பில அகலமான கடாயை வச்சி, பொரிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிசைஞ்சி வச்ச மாவில்,கொஞ்ச கொஞ்சமாக மாவெடுத்து உளுந்து வடை தட்டுவது போல் தட்டினபிறகு, அதை சூடேறிய எண்ணையில் போட்டு, நல்லா இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுத்தால் ருசியான பிரட் வடை ரெடி.