புதினா ஆம்லேட் செய்ய தேவையான பொருள்கள்:
முட்டை – 2
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோடா – 1 துளி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புதினா இலைகளை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றியதும், அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி கொள்ளவும்.
இறுதியில் உற்றிய முட்டையை சுற்றிலும், லேசாக எண்ணெய் விட்டு, வெந்ததும் முட்டையை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறினால், ருசியான புதினா ஆம்லெட் ரெடி.